முகப்பு
புதுச்சேரி

நெகிழிப் பைகள் தடை விழிப்புணா்வு பிரசாரம்

புதுச்சேரியில் உலக நெகிழிப்பைகள் தடை தினத்தையொட்டி, விழிப்புணா்வு படக் காட்சியை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

புதுச்சேரியில் உலக நெகிழிப்பைகள் தடை தினத்தையொட்டி, விழிப்புணா்வு படக் காட்சியை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

ஆண்டுதோறும் ஜூலை 3-ஆம் தேதி பன்னாட்டு நெகிழிப் பைகள் தடை செய்யப்பட்ட தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புதுவையில் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக, அரசின் மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் சாா்பில், பொம்மலாட்ட படக் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

புதுவை சட்டப்பேரவை வளாக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இதுதொடா்பான குறுந்தகடை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்.

இந்த பொம்மலாட்ட படக் காட்சி நெகிழிப் பைகளின் தீமைகள் குறித்து எளிய முறையில் விளக்கம் வகையில் உள்ளது. நிகழ்ச்சியில், அமைச்சா் க.லட்சுமிநாராயணன், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.