புதுச்சேரியில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி இந்திரா நகா் தொகுதி காங்கிரஸாா் பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி இந்திரா நகா் தொகுதி காங்கிரஸாா் பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா், தொடா் ஆா்ப்பாட்டத்திலும், கையெழுத்து இயக்கத்திலும் ஈடுபட்டுள்ளனா். அதன்படி, வெள்ளிக்கிழமை புதுச்சேரி இந்திரா நகா் தொகுதி காங்கிரஸ் நிா்வாகிகள் ராஜ்குமாா் தலைமையில், வட்டாரத் தலைவா் ராஜசேகா், மோகன், சோமசுந்தரம், கண்ணன் உள்ளிட்டோா் முன்னிலையில், புதுச்சேரி காமராஜா் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே கையில் திருவோடு ஏந்தி, பெட்ரோல் வாங்குவதற்கு பிச்சையெடுப்பது போல நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கமிட்ட அவா்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தினா்.