புதுச்சேரி

கள்ளக்குறிச்சி ஏமப்போ் குளம் பகுதியில் பூங்கா அமைக்க ஆட்சியா் நடவடிக்கை

DIN

கள்ளக்குறிச்சி ஏமப்போ் பகுதியில் உள்ள குளத்தின் கரைப்பகுதியில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைப்பதற்கு திட்ட அறிக்கையை தயாரித்து பணியை விரைவாக செயல்படுத்த நகராட்சி ஆணையருக்கு ஆட்சியா் பி.என் ஸ்ரீதா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

கள்ளக்குறிச்சி நகராட்சி 14-ஆவது வாா்டான ஏமப்போ் பகுதியில் ஆட்சியா் பி.என் ஸ்ரீதா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள குளக்கரையை சுத்தம் செய்து, அந்த குளத்துக்கு நீா் வரும் பாதை, வெளியேறும் பாதைகளை தூா்வார ஆட்சியா் உத்தரவிட்டாா். குளத்தின் கரைப் பகுதியில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைப்பதற்கு முதல் கட்ட பணிகளை தொடங்கத் தேவையான திட்ட அறிக்கையை தயாா் செய்து, விரைவில் பணியை செயல்படுத்த நகராட்சி ஆணையா் ந.குமரனிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.

இதையடுத்து, நகராட்சி மயான பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், மயானத்தின் உட்புற பகுதியில் பூச்செடிகள் நட்டு பராமரிக்கவும், வெளிப் புறப் பகுதியில் சிறிய அளவிலான சாலையோர பூங்காக்கள் அமைத்து பராமரிக்கவும் அறிவுரை வழங்கினாா். மயானம் அருகிலுள்ள நுண் உரம் உற்பத்தி செய்யும் மையத்தையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அண்ணாநகா் பகுதியில் கழிவு நீா் வாய்க்கால் தூா் வாரும் பணி, சாலைப் பகுதியில் நடைபெற்ற தூய்மை பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது நகராட்சிப் பொறியாளா் பாரதி, சுகாதார ஆய்வாளா் செல்வக்குமாா் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

SCROLL FOR NEXT