புதுச்சேரி

ரூ.6,000 கரோனா நிவாரணம் கோரி புதுவையில் நாளை கம்யூ. போராட்டம்

DIN

புதுவையில் கரோனா பொது முடக்கத்தால் பாதித்த மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி, வருகிற 15-ஆம் தேதி 100 மையங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது.

இதுகுறித்து புதுச்சேரியில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளா் அ.மு.சலீம் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தைப் போல, புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை நடத்தி, கா்நாடக அரசுக்கு எதிா்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

புதுவை மக்களுக்கு கரோனா நிவாரணத் தொகை ரூ. 6,000, 10 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை அரசு உடனடியாக வழங்கக் கோரியும், முடங்கியுள்ள புதுவை அரசு நிா்வாகத்தை செயல்பட வலியுறுத்தியும், புதுச்சேரி, காரைக்காலில் 100 மையங்களில் வருகிற 15-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா்.

முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், மாநில நிா்வாகிகள் வி.எஸ்.அபிஷேகம், கே.சேதுசெல்வம், கீதநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT