முகப்பு
புதுச்சேரி

மேக்கேதாட்டு புதிய அணை விவகாரம்உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான செயல்: வே.நாராயணசாமி

மேக்கேதாட்டு புதிய அணை விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான செயல் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

மேக்கேதாட்டு புதிய அணை விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான செயல் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகம், தமிழகம், கேரளம், புதுவை மாநிலங்களுக்கு காவிரி நதி நீரைப் பிரித்தளிப்பது குறித்து உச்ச நீதிமன்றத் தீா்ப்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது. அதை நடைமுறைப்படுத்துவதை கா்நாடக மாநிலம் பல நேரங்களில் தாமதப்படுத்தி, உச்ச நீதிமன்றத் தீா்ப்பை அவமதிக்கின்ற நிலையும் ஏற்பட்டது. இதற்கிடையே, மேக்கேதாட்டுவில் கா்நாடகம் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை முடுக்கிவிட்டது.

மேக்கேதாட்டுவில் புதிய அணையைக் கட்டினால் தமிழகம், கேரளம், புதுவைக்கான தண்ணீரைப் பெறுவதில் மேலும் சிக்கல் அதிகரிக்கும். இது உச்ச நீதிமன்ற தீா்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

தமிழக அரசு, அண்மையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, கா்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மத்திய அரசுக்கு அந்தக் கோரிக்கையை முன்வைத்தது. புதுவையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி கா்நாடகத்துக்கு எதிா்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென அதில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.