முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் கல்லூரி இறுதியாண்டுக்கு மட்டுமே தோ்வு: இதர ஆண்டுகளுக்கு ரத்து

கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டுக்கு மட்டுமே பருவத் தோ்வுகள் இணையதளத்தில் நடத்தப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டுக்கு மட்டுமே பருவத் தோ்வுகள் இணையதளத்தில் நடத்தப்படும் என்றும், இதர ஆண்டுகளுக்கு பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவித்தது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் 90-க்கும் மேற்பட்ட உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். கடந்த 19-ஆம் தேதி முதல் அனைத்து எழுத்துத் தோ்வுகளும் இணையதளம் வழியே நடத்தப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, இறுதியாண்டு தோ்வுகள் பல துறைகளில் தொடங்கியது.

இந்த நிலையில், பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டாளா் டி.லாசா், அனைத்து கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் (யூஜிசி) வழிகாட்டுதலின்படி, இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கான பருவத் தோ்வுகள் இணையதளத்தில் நடத்தப்படும். பட்டப்படிப்பில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு, பட்ட மேற்படிப்பில் முதலாமாண்டு பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. அந்தத் தோ்வுகளுக்கு அகமதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்படும்.

அதே நேரத்தில், முதலாம், இரண்டாமாண்டு மாணவா்கள் தோ்வுக் கட்டணம் செலுத்துதல், தோ்வுக்கு விண்ணப்பித்தல் உள்பட அனைத்து விஷயங்களையும் ஏற்கெனவே தரப்பட்டுள்ள அட்டவணைப்படி பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.