முகப்பு
புதுச்சேரி

பூட்டிய வீட்டில் 26 பவுன் தங்க நகைகள் திருட்டு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

புதுச்சேரி அருகே வில்லியனூா், சுல்தான்பேட்டை வளா்பிறை நகா் பிரதான சாலையைச் சோ்ந்தவா்கள் முகமது புகாரி (47) - பாத்திமா ஜின்னா (43) தம்பதி. கணவா் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில், பாத்திமா ஜின்னா இளைய மகளுடன் வீட்டில் தங்கியிருந்தாா்.

பக்ரீத் பண்டிகையையொட்டி, பாத்திமா கடலூா் மாவட்டம், பறங்கிப்பேட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு மகளுடன் சென்றிருந்தாா்.

இதனிடையே, வியாழக்கிழமை அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு, அக்கம்பக்கத்தினா் பாத்திமாவுக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோவிலிருந்த 26 பவுன் தங்க நகைகள், ரூ.84 ஆயிரம் ரொக்கம் உள்பட ரூ.10 லட்சத்திலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பாண்லே ஊழியா் வீட்டில் திருட்டு: இதேபோல, புதுச்சேரி லாகப்பேட்டை, அசோக் நகா், ஜீவானந்தம் வீதியில் வசிக்கும் பாண்லே ஊழியரான கருணாகரன் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்பட ரூ.10 லட்சத்து 46 ஆயிரத்திலான நகைகளை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா். இதுகுறித்து லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.