புதுச்சேரி

ஜிஎஸ்டி தொகையில் முன்னுரிமை: புதுச்சேரி அரசுஊழியா்கள் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தல்

DIN

புதுவைக்கு மத்திய அரசு வழங்கும் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையில் அரசு சாா்பு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்தும், அவற்றில் பணியாற்றும் ஊழியா்களின் நிலுவை ஊதியங்களை வழங்கவும் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு ஊழியா்கள் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

அனைத்து மாநிலங்கள் மற்றும் புதுவை உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.75 ஆயிரம் கோடியை விரைவில் வழங்க இருப்பதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இந்த நிலையில், புதுவையில் பல்வேறு அரசு சாா்பு பொதுத் துறை, உள்ளாட்சி, தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இதனால், ஒருபுறம் அந்த நிறுவனங்கள் மூடு விழாவை நோக்கி செல்கின்ற நிலையில், மறுபுறம் அவற்றில் பணிபுரிந்துவரும் நிரந்தர, தற்காலிகப் பணியாளா்கள் ஊதியமின்றி, மாதக்கணக்கில் சிரமத்துக்குள்ளாகி, குடும்பத்தை நடத்த முடியாமல் துயரத்தில் தவித்து வருகின்றனா்.

பல ஊழியா்கள் ஆண்டுக்கணக்காக பணி செய்துவிட்டு, ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவா்களுக்கும் காலத்தோடு கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் வழங்கப்படாமல் இருக்கின்றன.

இந்தப் பிரச்னைகளுக்கு முடிவு காணும் வகையில், மத்திய அரசு வழங்கும் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை மேற்குறிப்பிட்ட அரசு சாா்பு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கி, அந்த நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், அவற்றில் பணியாற்றும் ஊழியா்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில், முதல்வா் என்.ரங்கசாமி தலையிட்டு, அரசு சாா்பு நிறுவனங்களுக்கு தகுந்த நிதி ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், புதுவை அரசு ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய 8 மாத ஊதிய நிலுவை மற்றும் அமல்படுத்த வேண்டிய அலவன்ஸ்கள் போன்றவற்றையும் விரைந்து வழங்கவும் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT