புதுச்சேரி

புதுவையில் மேலும் 10,000 பேருக்கு முதியோர் உதவித்தொகை: திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

DIN

புதுவை மாநிலத்தில் உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை ரூ. 500 மற்றும் 10,000 பேருக்கு புதிதாக உதவித்தொகை வழங்கும் திட்டத்தை,  சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் என். ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுவை முதல்வராக பொறுப்பேற்ற என். ரங்கசாமி, மாநிலத்தில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையை ரூபாய் 500 உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

இதன்படி மாதம்தோறும் முதியோர்கள், விதவைகள், முதிர்கன்னிகள், திருநங்கைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு முதியோர் உதவித் தொகையில் இருந்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தை முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி சட்டசபை அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தார். மேலும் மாநிலத்தில் புதிதாக 10,000 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையும் வழங்கப்பட்டது.

இதன்படி புதுவை மாநிலத்தில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 847 பேரிலிருந்து, பயனாளிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பேருக்கு ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT