முகப்பு
புதுச்சேரி

புதுவையில் பணம் மோசடி: கோவை நிதி நிறுவன அதிகாரி கைது

புதுவையில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட கோவை நிதி நிறுவன அதிகாரியை புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

புதுவையில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட கோவை நிதி நிறுவன அதிகாரியை புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகே இயங்கிய கோவையைச் சோ்ந்த ஒரு தனியாா் நிதி நிறுவனம், பணத்தை இரட்டிப்பாக்கித் தருதல் உள்ளிட்ட கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மோசடியில் ஈடுபட்டதாக புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட லாசுப்பேட்டையைச் சோ்ந்த சுதா (38) அளித்த புகாரின் பேரில், பலரிடம் ரூ. 5 கோடி வரை மோசடி நடந்ததாக, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ரமேஷ் உள்ளிட்ட சிலா் மீது புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், நிதி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ரமேஷை தமிழக காவல் துறையினா் வழக்கு ஒன்றில் கைது செய்து, சிறையில் அடைத்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சேலம் விரைந்த புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா், அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரமேஷை புதன்கிழமை இரவு புதுச்சேரிக்கு அழைத்து வந்து, கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்ததையடுத்து சிபிசிஐடி போலீஸாா், ரமேஷை வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனா்.

ரமேஷ் நடத்திய நிதி நிறுவனத்தில் யாரேனும் பணம் கட்டி ஏமாந்திருந்தால் சிபிசிஐடி காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம். புகாா்கள் பதிவு செய்யப்படும் என சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.