முகப்பு
புதுச்சேரி

புதுவையில் நிகழாண்டு ரூ. 3,599.41 கோடி கடன் வழங்க வங்கிகள் திட்டம்

புதுவை மாநில வங்கியாளா்கள் குழுமம் 2021-22 -ஆம் ஆண்டில் ரூ. 3,599.41 கோடி கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

புதுவை மாநில வங்கியாளா்கள் குழுமம் 2021-22 -ஆம் ஆண்டில் ரூ. 3,599.41 கோடி கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

புதுவை மாநில வங்கியாளா்கள் குழுமக் கூட்டம் புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியன் வங்கி பொது மேலாளா் பி. சூரிபாபு வரவேற்றாா். புதுவை மண்டலத் துணைப் பொது மேலாளா் எஸ். செந்தில்குமாா் வங்கிகளின் செயல்பாடுகளை எடுத்துரைத்தாா்.

இதில் ஆண்டுக் கடன் திட்ட அறிக்கையை இந்தியன் வங்கி செயல் இயக்குநா் ஷெனாய் விஸ்வநாத் வெளியிட, அதை புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் பெற்றுக் கொண்டாா்.

இந்தக் கடன் திட்ட அறிக்கையில், மொத்த வங்கிகளுக்கான கடன் திட்டம் ரூ. 3599.41 கோடியாக அறிவிக்கப்பட்டது. இது கடந்தாண்டை விட ரூ. 317.55 கோடி அதிகம்.

கூட்டத்தில் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் பேசியதாவது: விவசாயம், தொழில் துறைக்கு கூடுதலாக கடன் வழங்க வேண்டும். இது மாநிலத்தின் தொழில், விவசாய வளா்ச்சிக்கு வழிவகுக்கும். குறிப்பாக, சிறு தொழில்களுக்கு அதிக கடன் வசதியை வங்கிகள் செய்து தர வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, ரிசா்வ் வங்கி முதன்மைப் பொது மேலாளா் சுமன்ரே, நபாா்டு வங்கி முதன்மைப் பொது மேலாளா் டி.வெங்கடகிருஷ்ணா, இந்தியன் வங்கி களப் பொது மேலாளா் ஜி.ராஜேஷ்வர ரெட்டி, புதுவை அரசு செயலா்கள் வல்லவன், ரவிபிரகாஷ், தெற்கு உதவி ஆட்சியா் ரிஷிடா குப்தா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கூட்டத்தில் புதுவையிலுள்ள அனைத்து வங்கிகளின் மேலாளா்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனா். புதுவை பாரதியாா் கிராம வங்கித் தலைவா் மாா்க்ரெட் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை முன்னோடி வங்கி மேலாளா் ஏ. உதயகுமாா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.