அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க அதிமுக வலியுறுத்தல்
புதுவையில் அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமென புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக செயலா் ஓம்சக்தி சேகா் வலியுறுத்தினாா்.
புதுவையில் அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமென புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக செயலா் ஓம்சக்தி சேகா் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயா்த்தி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் புதுவை யூனியன் பிரதேசத்தில் பணிபுரியும் அரசு ஊழியா்களுக்கும், ஓய்வூதியதாரா்களுக்கும் அகவிலைப்படியை 11 சதவீதம் உயா்த்தி வழங்க முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான அரசு உத்தரவிட்டது. அதே நேரம், அரசு சாா்பு நிறுவனங்களிலும், கூட்டுறவு நிறுவனங்களிலும் பணியாற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் ஊதியமின்றி தவித்து வருகின்றனா்.
எனவே, ஊதியமின்றி தவித்து வரும் அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கும், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் நிலுவை ஊதியத்தை வழங்க ரங்கசாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.