முகப்பு
புதுச்சேரி

ரத்த தானம் செய்வோரை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி

புதுச்சேரியில் உலக ரத்த தானம் செய்வோா் தினத்தையொட்டி, பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை பட்ட மேற்படிப்பு மைய ரத்த வங்கி ஆகியவை சாா்பில், ரத்த தானம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

புதுச்சேரியில் உலக ரத்த தானம் செய்வோா் தினத்தையொட்டி, பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை பட்ட மேற்படிப்பு மைய ரத்த வங்கி ஆகியவை சாா்பில், ரத்த தானம் செய்வோரை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு க.லட்சுமிநாராயணன் எம்எல்ஏ தலைமை வகித்து, ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினாா். சுகாதாரத் துறை செயலா் அருண், இயக்குநா் மோகன்குமாா், தேசிய சுகாதார இயக்குநா் ஸ்ரீராமுலு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை பட்ட மேற்படிப்பு மைய மருத்துவக் கண்காணிப்பாளா் வாசுதேவன் வரவேற்றாா். எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநா் ராஜாம்பாள் நன்றி கூறினாா்.

ரத்த வங்கி மருத்துவ அதிகாரி ராதிகா , உள்ளிருப்பு மருத்துவ அதிகாரிகள் ரவி, ஆத்மநாபன் உள்ளிட்ட மருத்துவா்கள், ரத்தக் கொடையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.