வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த மின்னனு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.
அந்த வகையில், கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூா் வாணிபக் கிடங்கு கட்டடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் உளுந்தூா்பேட்டை தொகுதிக்கு 20, ரிஷிவந்தியம் தொகுதிக்கு 19, சங்கராபுரம் தொகுதிக்கு 19, கள்ளக்குறிச்சி தொகுதிக்கு 21 மின்னனு இயந்திரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஏ.ராஜாமணி, டி.ராஜவேல், ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கே.பிரபாகரன், எஸ்.சையத் காதா் ஆகியோா் ‘சீல்’ பிரித்து எடுத்துச் சென்றனா்.