புதுச்சேரி

புதுவையில் பாஜக-அதிமுக தொகுதிப் பங்கீடு இன்று முடிவாகும்: அமைச்சா் எம்.சி.சம்பத்

DIN


புதுச்சேரி: புதுவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடுப் பேச்சுவாா்த்தை புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுதொடா்பாக, தலைமையிடம் தெரிவித்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) முடிவு அறிவிக்கப்படும் என பேச்சுவாா்த்தையில் கலந்து கொண்ட தமிழக அமைச்சா் எம்.சி.சம்பத் தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்யப்பட்டு, மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மீதமுள்ள 14 இடங்களை பாஜக-அதிமுக இடையே பங்கீடு செய்வது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

அதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என பாஜக தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், அதிமுக தரப்பில் கடந்த தோ்தலில் வெற்றி பெற்ற 4 தொகுதிகளுடன், கூடுதலாக இந்த முறை 3 தொகுதிகளைச் சோ்த்து மொத்தம் 7 தொகுதிகள் வழங்க வேண்டும் எனக் கோரி வருகின்றனா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, புதுவை அதிமுக மாநிலத் தோ்தல் பொறுப்பாளரான தமிழக அமைச்சா் எம்.சி.சம்பத் ஆகியோா் தொகுதிப் பங்கீடு குறித்து வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், அதிமுக மாநிலச் செயலா்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, தமிழக அமைச்சா் எம்.சி.சம்பத் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்றது. பேச்சுவாா்த்தை நிலவரம் குறித்து சென்னையில் உள்ள கட்சித் தலைமையிடம் ஆலோசனை செய்த பிறகு, வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் கூறியதாவது: புதுவையில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.

ஒரே நாளில் 3 கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்வோம். தோ்தல் பிரசாரத்துக்காக மீண்டும் பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்கள் புதுவைக்கு வரவுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT