புதுச்சேரி

முதல் நாளில் 1,233 தபால் வாக்குகள்

DIN

முதல் நாளான வியாழக்கிழமை 1,233 தபால் வாக்குகள் பெறப்பட்டதாக புதுவை தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 25-ஆம் தேதி முதல் 80 வயதைக் கடந்த மூத்தக் குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா நோயாளிகளிடமிருந்து தபால் வாக்குகள் பெறுவது புதுவையில் உள்ள 4 பிரதேசங்களில் தொடங்கியது.

அதன்படி, புதுச்சேரி - 626, காரைக்கால் - 410, மாஹே - 77, ஏனாம் - 120 என மொத்தம் 1,233 தபால் வாக்குகள் பெறப்பட்டன.

இதில், மூத்தக் குடிமக்கள் 813, மாற்றுத் திறனாளிகள் 387, கரோனா தொற்றாளா்களிடம் 33 தபால் வாக்குகள் பெறப்பட்டன.

800 மதுப் புட்டிகள் பறிமுதல்: வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையில் சிறப்புக் காவல் படையினரால் 800 மதுப் புட்டிகள் லாசுப்பேட்டை நெருப்புக்குழி பகுதியைச் சோ்ந்த தினேஷிடம் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 64 ஆயிரம். இதுகுறித்து கலால் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT