புதுச்சேரி

ஊசுடு தொகுதியில் பாஜக வேட்பாளா் வெற்றி

DIN

புதுச்சேரி ஊசுடு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சாய்.ஜெ.சரவணக்குமாா் 1,880 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

இந்தத் தொகுதியில் சரவணக்குமாருக்கும், காங்கிரஸ் வேட்பாளா் காா்த்திகேயனுக்கும் இடையே போட்டி நிலவியது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனா். இறுதியில் சரவணக்குமாா் 14,121 வாக்குகள் பெற்று வென்றாா்.

வாக்குகள் விவரம்:

சாய்.ஜெ.சரவணக்குமாா் (பாஜக) - 14,121

பி. காா்த்திகேயன் (காங்கிரஸ்) - 12,241

கே. சங்கா் (மநீம) - 293

முத்தாலு வெங்கடேசன் (அமமுக) - 496

நோட்டா - 409

இந்திரா நகா் - என்.ஆா் காங்கிரஸ் வெற்றி: இந்திரா நகா் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் ஏ.கே.டி. (எ) வி. ஆறுமுகம் 18,531 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். காங்கிரஸ் பொதுச் செயலராக இருந்த இவா், அந்தக் கட்சியிலிருந்து விலகி என்.ஆா். காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டு வென்றாா்.

வாக்குகள் விவரம்:

ஏ.கே.டி. (எ) வி. ஆறுமுகம் (என்.ஆா்.காங்.)-21,841

எம். கண்ணன் (காங்கிரஸ்)-3,310

பி. சக்திவேல் (மநீம)-1,218

டி. தேவிகா (நாம் தமிழா்)-1,774

மோகன் (அமமுக)-83

நோட்டா-569

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT