முகப்பு
புதுச்சேரி

கடற்கரைச் சாலையை 3 மணி நேரம் திறக்கமுன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

புதுச்சேரி கடற்கரைச் சாலையை 3 மணி நேரம் நடை பயிற்சிக்குத் திறக்க வேண்டுமென முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

புதுச்சேரி கடற்கரைச் சாலையை 3 மணி நேரம் நடை பயிற்சிக்குத் திறக்க வேண்டுமென முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசைக்கு, அவா் அனுப்பி மனு:

புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க அரசு முதலில் கட்டுப்பாடுகளை விதித்த போது, கடற்கரைச் சாலை காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று அறிவித்தது. ஆனால், மே 3 -ஆம் தேதி மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவித்த அரசு, புதுச்சேரி கடற்கரைச் சாலை முழு நேரமும் மூடப்படும் என அறிவித்துள்ளது. இது நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு கரோனா காலத்தில் கடற்கரையில் நடை பயிற்சி செய்தவா்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக, அவா்களது ஆரோக்கியம் மேம்பட்டு கரோனாவைத் தடுக்க நடைபயிற்சி உதவியது.

நடை பயிற்சி செய்பவா்கள் முகக் கவசம் அணிகின்றனா். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கின்றனா். உண்மையாக உடல் நலம் பேணுவோா் மட்டுமே கடற்கரைக்கு வருகின்றனா். சா்க்கரை, இருதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய் உள்ளவா்கள் கடற்கரையில் தங்களது நோயைக் கட்டுக்குள் வைக்க நடை பயிற்சி மேற்கொள்ளுகின்றனா்.

புதுச்சேரி மக்களின் நல வாழ்வில் அக்கறை கொண்டுள்ள ஆளுநா், கடற்கரைச் சாலையை காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணி நேரம் திறந்துவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.