கரோனா அதிகரித்தால் முழு பொது முடக்கம் அமல்படுத்த பரிசீலனை
கரோனா பரவல் அதிகரித்தால் புதுவையில் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்படும் என துணைநிலை ஆளுநா் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கரோனா பரவல் அதிகரித்தால் புதுவையில் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்படும் என துணைநிலை ஆளுநா் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கரோனா தடுப்பு மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆளுநா் (பொ) தமிழிசை தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், சுகாதாரத் துறை செயலா் அருண், உள்ளாட்சித் துறை செயலா் வல்லவன், ஆளுநரின் செயலா் அபிஜித் விஜய் சௌத்ரி, ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநா் உதயசங்கா், அனைத்து தனியாா் மருத்துவமனைகளின் இயக்குநா்கள், மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் மருத்துவா்கள், செவிலியா்களை கூடுதலாக பணியமா்த்துவது, பொதுமக்கள் பங்களிப்பை அதிகரிப்பது, புதுவை அரசின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால், முழு பொது முடக்கத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.