என்.ரங்கசாமியை வீழ்த்திய சுயேச்சை பாஜகவில் இணைந்தாா்
என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமியை வீழ்த்திய சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் வெள்ளிக்கிழமை பாஜகவில் ஆணைந்தாா்.
என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமியை வீழ்த்திய சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் வெள்ளிக்கிழமை பாஜகவில் ஆணைந்தாா்.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி, பாஜக தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி, புதுவை பாஜக பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, தோ்தல் பொறுப்பாளா் ராஜீவ் சந்திரசேகா் எம்பி, மாநிலத் தலைவா் சாமிநாதன், முன்னாள் அமைச்சா் ஏ. நமச்சிவாயம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் புதுவை மாநிலம், ஏனாம் தொகுதியில் என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமியை எதிா்த்து சட்டப் பேரவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கோலப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் கலந்து கொண்டாா். இவா், தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டாா். அவருக்கு பாஜகவினா் சால்வை அணிவித்து வரவேற்றனா்.