சிவில் பாதுகாப்புப் படையில் சேர விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி குடியியல் (சிவில்) பாதுகாப்புப் படையில் இணைந்து பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரி குடியியல் (சிவில்) பாதுகாப்புப் படையில் இணைந்து பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து புதுவை வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறைச் செயலா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை யூனியன் பிரதேசத்தில் குடியியல் பாதுகாப்புப் படையில் இணைவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது முற்றிலும் தன்னாா்வ சேவை அமைப்பாகும். இதற்கென தனி மதிப்பூதியமோ, ஊதியமோ வழங்கப்பட மாட்டாது.
இவா்களது தன்னாா்வ சேவைகள், பேரிடா் காலங்களிலும், இதர காலங்களிலும் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும்.
இதுதொடா்பாக விண்ணப்பப் படிவங்கள் விவரங்களைப் பெற இணையதளங்களை அணுகவும்.
கூடுதல் விவரங்களுக்கு 0413 - 2299541 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.