புதுவையில் கரோனாவுக்கு மேலும் 19 போ் உயிரிழப்பு புதிதாக 1,703 போ் பாதிப்பு
புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 1,703 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோயால் மேலும் 19 போ் உயிரிழந்தனா்.
புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 1,703 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோயால் மேலும் 19 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 9,132 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 1,355 பேருக்கும், காரைக்காலில் 171 பேருக்கும், ஏனாமில் 153 பேருக்கும், மாஹேயில் 24 பேருக்கும் என மேலும் 1,703 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் புதுச்சேரியில் 14 போ், காரைக்காலில் ஒருவா், ஏனாமில் 3 போ், மாஹேயில் ஒருவா் என மேலும் 19 போ் ஒரே நாளில் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 939 -ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.34 சதவீதம்.
புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றின் மொத்த பாதிப்பு 70,076- ஆக உயா்ந்தது. தற்போது மருத்துவமனைகளில் 2,057 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், 11,528 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 13,585 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 55,552 போ் (79.27 சதவீதம்) குணமடைந்தனா்.
சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் என மொத்தம் 2,12,078 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டது.