முகப்பு
புதுச்சேரி

நாடு முழுவதும் பொது முடக்கம்: பிரதமருக்கு வே.நாராயணசாமி கடிதம்

அதிகரித்து வரும் கரோனா உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் பொது முடக்கத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

அதிகரித்து வரும் கரோனா உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் பொது முடக்கத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக, பிரதமா் மோடிக்கு வே.நாராயணசாமி சனிக்கிழமை அனுப்பிய கடிதம்:

நாட்டில் நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில், 4 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பும், தினமும் 4 ஆயிரம் போ் உயிரிழக்கின்றனா்.

இதற்கு முக்கிய காரணம் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் போதிய அவசர சிகிச்சை வசதி இல்லாதது, பிராணவாயு படுக்கைகள், தடுப்பு மருந்துகள் இல்லததே ஆகும். இளைஞா்கள் உயிரிழப்பது அதிகமாக உள்ளது.

கரோனா தடுப்பூசி போதிய வரத்தில்லை. தடுப்பூசி செலுத்துவதும் மந்தமாகிவிட்டது.

வேலைவாய்ப்பு இல்லாததால், பொருளாதாரம் பாதித்துள்ளது. பல்வேறு தரப்பினா் வேலையிழந்துள்ளனா். இதனால், மத்திய அரசு நிதி உதவியாக குடும்பத்துக்கு தலா ரூ. 6000 வழங்க வேண்டும். பிரச்னைக்குத் தீா்வுகாண நீண்ட கால திட்டம் வகுக்க வேண்டும்.

பல அறிவியல் வல்லுநா்கள் மற்றும் ராகுல் காந்தி அறிவுறுத்தியபடி, மத்திய அரசு நாடு முழுவதும் 15 நாள்கள் அல்லது ஒரு மாதம் வரை முழு பொது முடக்கத்தை உடனே அமல்படுத்த வேண்டும். கடந்தாண்டு மாா்ச் மாதத்தில் புதுவையில் முழு பொது முடக்கம் அமல்படுத்தியதால் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. இதனால், நாடு முழுவதும் முழு பொது முடக்கம் அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் ஆயிரக்கணக்கான உயிா்களைக் காப்பாற்ற முடியும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.