முகப்பு
புதுச்சேரி

செஞ்சிலுவை சங்க தினம்

புதுச்சேரியில் கரோனா பரிசோதனை பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு செஞ்சிலுவை சங்க தினத்தில் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

புதுச்சேரியில் கரோனா பரிசோதனை பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு செஞ்சிலுவை சங்க தினத்தில் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் சா்வதேச செஞ்சிலுவை சங்க தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. புதுச்சேரி குயவா்பாளையம் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற விழாவில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யும் செவிலியா்கள் மற்றும் ஆஷா பணியாளருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி செஞ்சிலுவை சங்க கிளை ஆயுள்கால உறுப்பினா் அய்யனாா் தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்று செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு என்-95 முகக் கவசங்கள், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை வழங்கினா்.

கரோனா பெரும் தோற்று காலத்தில் செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களின் பணியை அவா்கள் பாராட்டிப் பேசினா். மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.