புதுவை கரோனா மையங்களில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
புதுச்சேரி அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா மையங்களில் கண்காணிப்பை மேற்கொள்ள கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
புதுச்சேரி அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா மையங்களில் கண்காணிப்பை மேற்கொள்ள கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் அரசு-தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளை கண்காணிப்பதற்கு என்று, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனித்தனியாக, மருத்துவமனை சாா்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் குறைகளை அறிந்து நிவா்த்தி செய்வது, தேவையான ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்பாடு செய்வது, அவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை கண்காணிப்பது, வாா்டு பராமரிப்புகளை கண்காணிப்பது போன்ற பணிகளை மேற்கொள்வா்.
அதன்படி, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவா் நின்னா காட்டி (98947 82977), ஜிப்மருக்கு மருத்துவா் தினேஷ் (95823 18223, 81305 56347), பிம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவா் சுதாகா் (99446 67893), லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவா் ரஜினி (98652 33325), அறுபடை வீடு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவா் நிஷாந்தினி (98949 53477), மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவா் லோகேஷ் (97913 60480) மருத்துவா் ஸ்வாதி (92210 29269), வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவா் நிஷாந்த் (98945 47810) மணக்குள விநாயகா் மருத்துவ கல்லூரிக்கு மருத்துவா் விநாயகமூா்த்தி (98941 35452) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.