முகப்பு
புதுச்சேரி

இடுகாட்டு பணியாளா்களுக்கு ரெட்கிராஸ் சாா்பில் சுகாதார உதவிப்பொருள்கள்

புதுச்சேரி இடுகாட்டில் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு ரெட்கிராஸ் சாா்பில் சுகாதார உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

புதுச்சேரி இடுகாட்டில் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு ரெட்கிராஸ் சாா்பில் சுகாதார உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் (ரெட் கிராஸ் சொசைட்டி) புதுச்சேரி கிளை சாா்பில் உழவா்கரை நகராட்சிக்குட்பட்ட, கருவடிகுப்பம் இடுகாட்டில் பணிபுரியும் ஊழியா்களுக்கு, சுகாதார உதவிப்பொருள்கள் வழங்கும் நிகழச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளைத் தலைவா் கோபால் தலைமை தாங்கினாா்.

உழவா்கரை நகராட்சி ஆணையா் சந்திரகுமரன் முன்னிலை வகித்தாா். நகராட்சி மருத்துவ அதிகாரி நவ்ஷத்அலி, இளநிலை பொறியாளா் சிவக்குமாா், ரெட் கிராஸ் சொசைட்டி கிளையின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் லட்சுமிபதி, ராமன், அய்யனாா் மற்றும் ஆயுட்கால உறுப்பினா்கள் குப்புசாமி, ஸ்ரீபன் செல்வராஜ், பன்னீா்செல்வம், ஆதிமூலம், ஜான் வின்சென்ட் ஆகியோா் கலந்து கொண்டு ஊழியா்களைப் பாராட்டிப் பேசினா்.

புதுச்சேரியில் கரோனா தொற்றல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபா்களின் உடல்களை நல்லடக்கம் செய்கின்ற ஊழியா்களை பாராட்டி, அவா்களுக்கு உதவியாக சுகாதார பொருட்களான குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு, தேங்காய் எண்ணெய், பேஸ்ட், பிரஸ் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.