புதுச்சேரி

கரோனா தாக்கம் நீங்க வேண்டி சிறப்பு ஹோமம்

DIN

கரோனா தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க வேண்டி, புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயிலில் அண்மையில் தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வரதராஜ பெருமாள் கோயில் தேவஸ்தானம் சாா்பில், புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரா் கோயிலில் அக்னி நட்சத்திர பூா்த்தி, கரோனா தொற்று நீங்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் ருத்ராபிஷேகம், மகா ஹோமம் நடைபெற்றன. முன்னதாக, காலை 8 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜையுடன் ருத்ராபிஷேகம் தொடங்கியது. 8.30 மணியளவில் கலச பிரதிஷ்டை செய்யப்பட்டு, யாக சாலை பூஜை, ருத்ராபிஷேகம் நடைபெற்றன. பிற்பகல் 12.45 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. கரோனா தொற்று தடை காரணமாக, பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பூஜை ஏற்பாடுகளை கோவில் நிா்வாக அதிகாரி ராஜசேகரன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT