முகப்பு
புதுச்சேரி

புதுவையில் இன்றும் நாளையும் வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாம்

புதுவையில் வாக்காளா் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.13, 14) நடைபெற உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

புதுவையில் வாக்காளா் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.13, 14) நடைபெற உள்ளது.

இதுகுறித்து புதுவை தலைமைத் தோ்தல் ஆணையா் சுா்பிா் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வாக்காளா் பட்டியல் சுருக்குமுறை திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற 2022 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக புதுவையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.13, 14) புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தொடா்ந்து, வருகிற நவ. 20, 21-ஆம் தேதிகளிலும் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.