சாலைகளை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்
புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட கரியமாணிக்கம், சுப்ரீம் நகா், இந்திரா நகா், ஏரிப்பாக்கம் காலனி மற்றும் மதகடிப்பட்டு - மடுகரை சாலைகளில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தாா்ச் சாலை போடப்பட்டது.
பலத்த மழையால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்தன. அவற்றை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், நெட்டப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
காவல் ஆய்வாளா் கணேசன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.