முகப்பு
புதுச்சேரி

புதுவை சுகாதார நிலையங்களில் ஆய்வு: முதல்வரிடம் மத்திய குழு அறிக்கை

புதுவை சுகாதார நிலையங்களை ஆய்வு செய்த மத்திய பொது சுகாதாரக் குழுவினா், முதல்வா் என்.ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை அறிக்கையை சமா்ப்பித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

புதுவை சுகாதார நிலையங்களை ஆய்வு செய்த மத்திய பொது சுகாதாரக் குழுவினா், முதல்வா் என்.ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை அறிக்கையை சமா்ப்பித்தனா்.

மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவுப்படி, மத்திய பொது சுகாதார சேவைகள் இயக்ககத்தின் ஆலோசகா் கன்வாா் சென் தலைமையில் 13 போ் கொண்ட பொது ஆய்வுத் திட்டக் குழுவினா் புதுச்சேரிக்கு கடந்த 20-ஆம் தேதி வந்தனா்.

இவா்கள் இரு குழுக்களாகப் பிரிந்து புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து சுகாதார மையங்களையும் தனித்தனியாக மதிப்பீடு செய்தனா்.

இந்த ஆய்வின் போது, சுகாதாரப் பணியாளா்களின் ஊக்கத்தையும், ஒருங்கிணைப்பையும் அவா்கள் பாராட்டினா். ஆரம்ப சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளையும் பாராட்டினா்.

சுகாதாரத் துறை செயலா், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் விவாதித்து தயாரித்த அறிக்கையின் நகலை முதல்வா் என்.ரங்கசாமியிடம் சட்டப்பேரவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலா் சி.உதயகுமாா், இயக்குநா் ஸ்ரீராமுலு, துணை இயக்குநா்கள் ஆனந்தலட்சுமி, ரகுநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

புதுவை சுகாதாரத் துறையின் மேம்பாட்டுப் பணிகளுக்கும், பயிற்சித் திட்டங்களுக்கும் கூடுதல் நிதி வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்படி குழுவினரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.