முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியிலிருந்து கடல் சாகச பயணம்: ஆளுநர் தமிழிசை தொடங்கி வைப்பு

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தேங்காய்த்திட்டு மீன்பிடிப் படகுத்துறையிலிருந்து செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
புதுச்சேரியிலிருந்து கடல் சாகச பயணம்: ஆளுநர் தமிழிசை தொடங்கி வைப்பு
பகிர்:

புதுச்சேரியில் இருந்து தொடங்கிய தேசிய மாணவர்ப்படை கடற்படைப் பிரிவின், புதுச்சேரி-காரைக்கால் கடல் சாகசப் பயணத்தை,  துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தேங்காய்த்திட்டு மீன்பிடிப் படகுத்துறையிலிருந்து செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். 

இந்தப் படகு பயணத்தில் 25 பெண்கள் உட்பட 60 தேசிய மாணவர்ப்படை, கடற்படைப் பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த 11 நாள் ‘சமுத்ர நௌகாயன்’ (SAMUDRA NAUKAYAN) கடல் சாகசப் பயணம், புதுச்சேரி தேங்காய்த்திட்டு படகுத்துறையில் தொடங்கி காரைக்கால் சென்று, மீண்டும் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறைவடையும். 

மொத்தம் 302 கிலோமீட்டர் கடல் சாகச பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் அக்டோபர் 15 அன்று முடியும் என தெரிவித்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →