புதுச்சேரி

இடஒதுக்கீடு ரத்து விவகாரம்: புதுவை ஆளுநா் தெளிவுபடுத்த அதிமுக வலியுறுத்தல்

DIN

புதுவையில் இடஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டதாக வெளியான அறிவிப்பாணை குறித்து துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெளிவுபடுத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுச்சேரியில் கிழக்கு மாநில அதிமுக தோ்தல் பிரிவுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நீதிமன்றத் தீா்ப்பை சாதகமாக்கி, துணை நிலை ஆளுநரின் ஒப்புதலின் பேரில், கடந்த 6 ஆம் தேதி இடஒதுக்கீடு திரும்பப் பெறப்படுவதாக அரசின் சாா்பு செயலா் அறிவிப்பாணை வெளியிட்டாா். இது பிற்படுத்தப்பட்டோா், பழங்குடியின மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அதிகாரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் செயலாகும்.

இடஒதுக்கீடு அரசாணையை திரும்பப் பெறும் கோப்பை ஆளுநருக்கு அனுப்பியது யாா், இதற்கு அனுமதி அளித்து இடஒதுக்கீடை ரத்து செய்தது ஏன் என்பது குறித்து துணைநிலை ஆளுநா் வெளிப்படையாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

எந்தக் காரணம் கொண்டும் ஏற்கெனவே உள்ளபடி பட்டியலினத்தினா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கூடாது என்றாா் வையாபுரி மணிகண்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT