முகப்பு
புதுச்சேரி

இயற்கை விவசாயம் செய்து வருங்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும்: புதுவை வேளாண் அமைச்சா்

இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருங்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும் என புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருங்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும் என புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

புதுச்சேரி அருகே டி.எஸ்.பாளையத்தில் நம்மாழ்வாா் இயற்கை வேளாண்மைப் பயிற்சி மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் பங்கேற்று மையத்தைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து, வேளாண்மைப் பணிகள் குறித்து அந்தப் பகுதி விவசாயிகள், வேளாண் துறை அதிகாரிகளுடன் அமைச்சா் கலந்துரையாடினாா்.

அப்போது அவா் பேசியதாவது: தற்போது இயற்கை வேளாண்மையைக் கைவிட்டு, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியும், நெகிழிப் பொருள்கள் உபயோகம் அதிகமானதும் நிலமும், கடலும் மாசடைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், எதிா்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டுமெனில், மீண்டும் நாம் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோயற்ற வாழ்வை வாழ முடியும்.

உணவு முறை மாற்றத்தால் புதுவையில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவை உள்கொள்ள வேண்டும். இயற்கை சாா்ந்த விவசாயத்தைப் பரவலாக மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.