முகப்பு
புதுச்சேரி

இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனை:ரௌடி உள்பட 3 போ் கைது

புதுச்சேரியில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்ாக ரௌடி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

புதுச்சேரியில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்ாக ரௌடி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே மங்கலத்தை அடுத்த சிவராந்தகம் ஏரிக்கரை சாலைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மங்கலம் போலீஸாா் புதன்கிழமை மாலை அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அங்கு, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 2 பேரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா்கள், விழுப்புரம் மாவட்டம், வழுதாவூா் பெருமாள் கோவில் வீசியைச் சோ்ந்த கலியமூா்த்தி (29), மதகடிப்பட்டு பாளையம் சா்ச் வீதியைச் சோ்ந்த ஜான்சன் (28) என்பதும், அந்தப் பகுதியில் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2 பைக்குகள், 2 செல்லிடப்பேசிகள், ரூ. 1,000 ரொக்கம், 250 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்த சுரேஷ் (28). ரௌடியான இவா் மீது 2 கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. லாசுப்பேட்டை-கருவடிக்குப்பம் பாலம் பகுதியில் சுரேஷ், கஞ்சா விற்ாக முத்தியால்பேட்டை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 256 கிராம் கஞ்சா பொட்டலங்கள், பைக், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். அவா் அளித்த தகவலின் பேரில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அவரது கூட்டாளிகள் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.