வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு 
புதுச்சேரி

புதுவை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 6-வது நாளாக புதுவை சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 6-வது நாளாக புதுவை சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.

இதனிடையே பேசிய எதிர்க்கட்சித் தலைவர் திமுக எம்எல்ஏ ஆர்.சிவா, எல்.சம்பத் உள்ளிட்டோர் எழுந்து, விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு முதல்வர் என்.ரங்கசாமி பதில் அளிக்காமல் மவுனம் காத்தார்.

இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா தலைமையில் திமுக, காங்கிரஸ் மற்றும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சிறிது நேரத்தில், பிறகு மீண்டும் அவர்கள் அவைக்கு வந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை மிரட்டி வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை!

என்எல்சி நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணா்வு ஒப்பந்தம்

ரூ.6.74 லட்சம் பணம் மோசடி: இளைஞா் சிக்கினாா்

சிதம்பரத்தில் தேசிய நூலக வார விழா

நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் விளையாட்டு அறை திறப்பு

SCROLL FOR NEXT