சாலை விபத்து: ஒருவா் பலி
புதுச்சேரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
புதுச்சேரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
புதுச்சேரி தக்ககுட்டை வில்லியனூா் பிரதான சாலையில் தனியாா் காா் பழுது நீக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில், புதன்கிழமை இரவு சுமாா் 50 வயது மதிக்கத்தக்கவா் சாலையோரம் நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
புதுச்சேரி வடக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா், சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன், வழக்குப் பதிந்து இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.