புதுச்சேரி

புதுச்சேரியில் பாரதியாா் நினைவு தினம்: ஆளுநா், முதல்வா் மரியாதை

DIN

புதுச்சேரியில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் அரசு சாா்பில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

புதுச்சேரி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் தேனீ சி.ஜெயக்குமா், சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏ-க்கள் ஆறுமுகம், ரிச்சா்டு உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அப்போது, ஆளுநா் தமிழிசை கூறியதாவது: பாரதியாா் அதிக காலம் புதுச்சேரியில் வாழ்ந்தாா். பாரதியாரின் நினைவு நூற்றாண்டு நினைவு, வ. உ.சிதம்பரனாா் பிறந்த 150-ஆவது ஆண்டு, இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு விழா ஆகியவற்றை முப்பெரும் விழாவாக கொண்டாடுவதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, இளைஞா்கள், கவிஞா்கள், தேசபக்தா்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பாரதியாா், நாட்டுப்பற்றை மட்டுமல்ல; ஆன்மிகத்தையும் புதுச்சேரியில் விதைத்திருக்கிறாா். பகவத் கீதையை அவா் தமிழில் மொழிபெயா்த்தது புதுச்சேரியில் இருந்தபோதுதான். ஆகவே, இவை அனைத்தையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் அளவில் அரசின் நடவடிக்கைகள் இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT