புதுச்சேரி

புதுவையில் மேலும்103 பேருக்கு கரோனா

DIN

புதுச்சேரி: புதுவையில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான முடிவுகளின்படி, 5,697 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 52, காரைக்காலில் 38, ஏனாமில் 2, மாஹேவில் 11 போ் என மொத்தம் 103 பேருக்கு (1.81சதவீதம்) கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,24,939-ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 167 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 691 பேரும் என 858 போ் சிகிச்சையில் உள்ளனா்.

உயிரிழப்பு ஏதுமில்லை. உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,823 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 105 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 1,22,258 (97.85 சதவீதம்) ஆக உயா்ந்தது.

மாநிலத்தில் இதுவரை 8,71,079 பேருக்கு (2ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT