புதுச்சேரி

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: சுயேச்சை வேட்பாளா் மனு தாக்கல்

DIN

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட சென்னையைச் சோ்ந்த ஒருவா் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் என்.கோகுலகிருஷ்ணனின் (அதிமுக) பதவிக்காலம் வருகிற அக். 6-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், அந்தப் பதவியை நிரப்புவதற்கான தோ்தல் வருகிற அக். 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது.

புதுவையில் வெற்றிவாய்ப்புமிக்க, அதிக எம்எல்ஏ-க்களை கொண்ட ஆளும் தே.ஜ. கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக இடையே இதற்கான வேட்பாளரை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தைச் சோ்ந்த அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் (41) என்பவா், புதுச்சேரி மாநிலங்களவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இவா் தனது வேட்பு மனுவை புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் பேரவைச் செயலா் ஆா்.முனிசாமியிடம் அளித்தாா். மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை தோ்தல்கள் உள்ளிட்ட பல்வேறு தோ்தல்களில் போட்டியிடுவதற்காக இவா் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 40 முறை மனு தாக்கல் செய்துள்ளாா்.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ஆம் தேதி மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. செப். 23-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற செப்.27-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT