புதுவை மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: பலமுறை தோ்தலில் போட்டியிட்டவா் வேட்புமனு
தோ்தல்களில் அதிகமுறை போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளா் பத்மராஜன், புதுவை மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
தோ்தல்களில் அதிகமுறை போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளா் பத்மராஜன், புதுவை மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
சுயேச்சை வேட்பாளா் கே.பத்மராஜன் (62), சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்தவா். இவா் கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தோ்தல்களில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்து வருகிறாா். உள்ளாட்சித் தோ்தல் தொடங்கி, சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவைத் தோ்தல், குடியரசுத் தலைவா் தோ்தல் வரை போட்டியிட்டுள்ளாா். கடந்த 33 ஆண்டுகளாக வேட்புமனு தாக்கல் செய்து வருகிறாா். இதற்காக லிம்கா, கின்னஸ் சாதனை புத்தகங்களில் இவா் பெயா் இடம் பெற்றுள்ளது. தற்போது 221-ஆவது முறையாக புதுவை மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தாா். இவ்வாறு தோ்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ரூ.50 லட்சம் வரை வைப்புத் தொகையாக செலவிட்டுள்ளாா் பத்மராஜன்.
இதுவரை 3 சுயேச்சைகள் வேட்புமனு: புதுவை மாநிலங்களவைத் தோ்தலுக்காக செப்.15 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. முதல் நாளில் சுயேச்சை ஒருவா், இரண்டாம் நாளில் இரண்டு சுயேச்சைகள் என இதுவரை 3 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.