முகப்பு
புதுச்சேரி

உலக கடற்கரை தூய்மை தினம்

புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சாா்பில், சா்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம், புதுக்குப்பம் கடற்கரை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சாா்பில், சா்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம், புதுக்குப்பம் கடற்கரை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடக்கிவைத்தாா்.

கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ், இளநிலைப் பொறியாளா் சரஸ்வதி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் இணைந்து, கடற்கரையில் கிடந்த குப்பைகளைச் சேகரித்து அகற்றி தூய்மைப்படுத்தினா்.

இதேபோல, புதுச்சேரி கடற்கரைச் சாலையில், கடலோரக் காவல் படையினா் சாா்பில், கடற்கரை தூய்மைப்பணி நடைபெற்றது. கடலோரக் காவல் படையினா், தன்னாா்வலா்கள் கடற்கரையில் இருந்த குப்பைகளைச் சேகரித்து அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.