பாஜக வேட்பாளா் எஸ்.செல்வகணபதி 
புதுச்சேரி

புதுவை மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வானார் செல்வகணபதி

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் பாஜக வேட்பாளா் எஸ்.செல்வகணபதி போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி திங்கள்கிழமை அறிவித்தார்.

DIN

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் பாஜக வேட்பாளா் எஸ்.செல்வகணபதி போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி திங்கள்கிழமை அறிவித்தார்.

புதுவையில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு அக்.4-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்.15-ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. சுயேச்சைகள் 5 பேரும், பாஜக வேட்பாளா் ஒருவரும் என 6 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

எம்எல்ஏக்கள் யாரும் முன் மொழியாததால், சுயேச்சைகள் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பாஜக வேட்பாளா் எஸ்.செல்வகணபதியின் வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டது.

இந்நிலையில், புதுவை  மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி இன்று அறிவித்துள்ளார்.

இதன்மூலம், புதுவையில் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவைச் சோ்ந்தவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தைகள் 2வது நாளாக சரிவுடன் நிறைவு!

அவர்கள் செய்வது ரௌடித்தனம்... யாரைச் சொல்கிறார் சுதா கொங்கரா?

“பொழுதுபோக்கிற்குள் அரசியல் வேண்டாம்!” நடிகர் ரவி மோகன்

அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்! அறிவிப்பு விடியோ!

தலைகீழாகக் கவிழ்ந்த தனியார் பேருந்து! பயணிகள் காயம்!

SCROLL FOR NEXT