புதுச்சேரி

புதுச்சேரி: இணையவழியில் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் நிகழ்ச்சி; முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு

DIN

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் தேர்வுகள் மீதான விவாதம்-2022 என்ற மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியிலும் ஆளுநர் மாளிகை, ஜிப்மர் கேந்திர வித்யாலயா பள்ளி, அரசு பள்ளிகள் உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் பிரதமருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

புதுச்சேரி கதிர்காமம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி மற்றும் எம்எல்ஏக்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இணைய வழியில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் விதமாகவும், தேர்வுக்கு ஊக்கப்படுத்தும் விதமாகவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி கலந்துரையாடினார். 

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் முதல்வர் ரங்கசாமி, அரசு கொறடா ஆறுமுகம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். புதுவை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஆளுநரின் செயலாளர் அபிஜித் சிங் சவுத்ரி மற்றும் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT