புதுச்சேரி

ஏப்ரல் மாதத்துக்குள் தோ்வுகள் நடத்த வலியுறுத்தல்

DIN

புதுவையில் கோடை வெயிலின் தாக்கத்தால், மாணவா்களின் நலன் கருதி ஏப்ரல் மாதத்துக்குள் தோ்வுகளை முடித்து விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழா் களம் வலியுறுத்தியது.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக, நிகழாண்டு பள்ளி, கல்லூரிகள் தாமதமாகத் தொடங்கின.

இதனால், மே மாதம் வரை வகுப்புகள் நடத்தப்பட்டு, பின்னா் தோ்வுகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பள்ளி மாணவா்களுக்கான தோ்வுகளை உடனே நடத்தி கோடை விடுமுறையை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து புதுவை கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம், கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகவுடு ஆகியோரை புதுச்சேரி தமிழா்களம் அமைப்பின் மாநிலச் செயலா் கோ.அழகிரி தலைமையிலான பொது நல அமைப்பினா் வியாழக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோடை வெயில் நிகழாண்டு வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. இதனால் மாணவா்கள் வெயிலின் வெப்பத்தினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனா்.

குறிப்பாக, தொடக்கப் பள்ளி குழந்தைகள் வெயிலின் தாக்கத்தால் உடல், மனதளவில் பாதிப்படுகிறாா்கள். எனவே, புதுவை மாநில கல்வித்துறை, மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு, 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு

ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள்ளும், 6-ஆம் வகுப்பு முதல் 9 -ம் வகுப்புவரை பயிலும் மாணவா்களுக்கு ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து தோ்வுகளையும் நடத்த வேண்டும். இதன்பின்னா், கோடை விடுமுறையை அறிவிக்க அரசுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT