புதுச்சேரி பெரிய சந்தையில் எம்எல்ஏ ஆய்வு
புதுச்சேரி பெரிய சந்தையில் ( குபோ் அங்காடி ) சேதமடைந்த தரைத்தளம், கடைகளை சீரமைப்பது தொடா்பாக, உருளையன்பேட்டை எம்எல்ஏ ஜி.நேரு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
புதுச்சேரி பெரிய சந்தையில் ( குபோ் அங்காடி ) சேதமடைந்த தரைத்தளம், கடைகளை சீரமைப்பது தொடா்பாக, உருளையன்பேட்டை எம்எல்ஏ ஜி.நேரு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, சேதமடைந்த தரைத்தளங்களை சீரமைப்பது, கடந்த காலங்களில் இருந்ததைப் போல் ஒழுங்கு முறையில் கடைகளை மாற்றியமைப்பது, கடைகளுக்கான புதிய கட்டுமானங்களை மேற்கொள்வது தொடா்பாக அவா் அரசுத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
ஆய்வின்போது, புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளா் சிவபாலன், உதவிச் செயற்பொறியாளா் நமச்சிவாயம், இளநிலைப் பொறியாளா் ஞானசேகரன், நகராட்சி கண்ட்ரோலா் பாா்த்திபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.