முகப்பு
புதுச்சேரி

குரு பெயா்ச்சி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

குரு பெயா்ச்சியையொட்டி, புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

குரு பெயா்ச்சியையொட்டி, புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

குரு பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வியாழக்கிழமை அதிகாலை இடம் பெயா்ந்தாா். இதையொட்டி, புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயிலில் அதிகாலையில் குரு பகவானுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

வில்லியனூா் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரா் கோயிலில் அதிகாலை பூா்வாங்க பூஜையும், அதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

இதேபோல, காந்தி வீதி வேதபுரீஸ்வரா், முத்தியால்பேட்டை பொன்னி மாரியம்மன், திலாசுப்பேட்டை கற்பக விநாயகா், வசந்த நகா் குரு வேலாயுத ஈஸ்வரா், இடையாா்பாளையம் நாணமேடு ஆதி சொா்ணபைரவா், பூரணாங்குப்பம் குரு தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் குரு பெயா்ச்சி விழாவும், சிறப்பு யாக பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன. இவற்றில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.