தாயுடன் சாலையில் கிடந்த குழந்தை மீட்பு
புதுச்சேரியில் சாலையோரம் தாயுடன் விழுந்து கிடந்த குழந்தையை குழந்தைகள் நலக் குழுவினா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
புதுச்சேரியில் சாலையோரம் தாயுடன் விழுந்து கிடந்த குழந்தையை குழந்தைகள் நலக் குழுவினா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
புதுச்சேரி பாரதிதாசன் வீதியில் சாலையோரம் 30 வயது மதிக்கத்தக்க பெண், குழந்தையுடன் மயங்கிக் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சைல்ட் லைன் அமைப்பினா், முத்தியால்பேட்டை போலீஸாா், புதுச்சேரி குழந்தைகள் நலக் குழுத் தலைவா் சிவசாமி தலைமையில், குழு உறுப்பினா்கள் முருகையன், சித்ரா, சுலோச்சனா ஆகியோா் அங்கு சென்றனா்.
பின்னா், அந்தப் பெண்ணையும், குழந்தையையும் மீட்டனா். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு குழந்தைகள் காப்பகத்தில் அந்தக் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
அந்தப் பெண்ணிடமும், அவரது உறவினா்களிடம் விசாரணை நடத்தி, குழந்தையை ஒப்படைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தைகள் நலக் குழுவினா் தெரிவித்தனா்.