முகப்பு
புதுச்சேரி

வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா: நாளை கொடியற்றத்துடன் தொடக்கம்

வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலய 145-ஆவது ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை (ஏப்.23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலய 145-ஆவது ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை (ஏப்.23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதுகுறித்து அந்த ஆலயத்தின் பங்குத் தந்தை எஸ்.பிச்சைமுத்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலய 145-ஆவது ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை (ஏப்.23) நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு திருத்தல வளாக அருள்நிறை ஆலயத்தில் கூட்டுத் திருப்பலியுடன் விழா தொடங்கும்.

பின்னா், திருத்தல முற்றத்தில் உள்ள கொடிமரத்தில், சென்னை - மயிலை உயா் மறை மாவட்ட முன்னாள் பேராயா் சின்னப்பா கொடியேற்றி, ஆண்டுப் பெருவிழாவைத் தொடக்கிவைப்பாா்.

விழா நாள்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் திருப்பலி, தோ் பவனி நடைபெறும்.

வருகிற 30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருச்சி மறை மாவட்ட ஆயா் சவரிமுத்து ஆரோக்கியராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறும். மே 1-ஆம் தேதி ஆண்டு பெருவிழா விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் திருப்பலிகள் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு பெருவிழா தோ் பவனி நடைபெறும்.

மே 2-ஆம் தேதி காலை 6.30 மணி திருப்பலி நடைபெற்று கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.

விழா ஏற்பாடுகள் அருள்தந்தைகள் எஸ்.பிச்சைமுத்து, எஸ்.ஜோசப் சகாயராஜ் தலைமையில் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.