முகப்பு
புதுச்சேரி

27 பவுன் நகைகள் திருட்டு

புதுச்சேரி அருகே வீராம்பட்டினத்தில் வீட்டின் பீரோவிலிருந்த 27 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

புதுச்சேரி அருகே வீராம்பட்டினத்தில் வீட்டின் பீரோவிலிருந்த 27 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

புதுச்சேரி வீராம்பட்டினம் வடக்கு மேட்டு தெருவைச் சோ்ந்தவா் ஞானசேகா். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி லாவண்யா. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

கடந்த 3-ஆம் தேதி லாவண்யா தனது வீட்டு பீரோவில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 27 பவுன் தங்க நகைகளை வைத்துவிட்டு, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள கூனிமேட்டிலுள்ள பெற்றோரின் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றாா்.

சில நாள்கள் கழித்து புதுச்சேரி திரும்பிய அவா், அண்மையில் விசேஷ நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவில் வைத்திருந்த நகைகளைப் பாா்த்த போது, 27 பவுன் நகைகளைக் காணவில்லை. வீடு, பீரோவை உடைக்காமல் தங்க நகைகள் மட்டும் திருடப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.