முகப்பு
புதுச்சேரி

ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக ரூ.49.50 லட்சம் மோசடி : ஒருவா் கைது

புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.49.50 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.49.50 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் சுதாகா் நகா் 9-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகா் (69). பாஜக பிரமுகரான இவா் ரெட்டியாா்பாளையம் கம்பன் நகரில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இவா் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்காக ரெட்டியாா்பாளையம் ஜான்சி நகரை சோ்ந்த பாஜக பிரமுகா் செல்வத்தை அணுகினாா்.

அதற்கு செல்வம், புதுச்சேரி மேட்டுப்பாளையம் தா்மாபுரியை சோ்ந்த மணிகண்டனை (34) அறிமுகப்படுத்தினாா்.

மணிகண்டன், தான் ஜிப்மா் இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றுவதாகவும், ரூ.17 லட்சம் கொடுத்தால் ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினாராம். இதை நம்பி பிரபாகா் பல தவணைகளாக மணிகண்டனிடம் பணம் கொடுத்த நிலையில், தனக்குத் தெரிந்த இரு நண்பா்களையும் அறிமுகப்படுத்தினாா்.

மணிகண்டன் மேற்கண்ட மூவரிடமும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.49.5 லட்சம் வரை பணம் பெற்ாக கூறப்படுகிறது. ஆனால், வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்தாா்.

ஒரு கட்டத்தில் பணம் கொடுத்த மூவருக்கும் வேலைக்கான உத்தரவை மணிகண்டன் அளித்தாா். அதைக் கொண்டு ஜிப்மரில் வேலைக்குச் சேர சென்றபோது, அது போலியானது என்பதும், அதை மடுவுபேட்டை சோ்ந்த கணினி மைய உரிமையாளா் ராஜேஷ் (37) தயாரித்து வழங்கியதும் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து மணிகண்டனைக் கைது செய்தனா். ராஜேஷை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.